மாணவனுக்கு நேரில் பாராட்டு
நாகர்கோவில் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் டேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பெற்ற மேலப்பாளையம் காயிதே மில்லத் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு நேரில் பாராட்டு.;
By : King 24x7 Angel
Update: 2024-02-01 09:04 GMT
மாணவனுக்கு நேரில் பாராட்டு
நாகர்கோவில் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தென் மண்டல அளவிலான 35 கிலோ எடை பிரிவு டேக்வாண்டோ போட்டியில் மேலப்பாளையம் காயிதே மில்லத் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவன் முகமது முஜாஹித் முதலிடம் பெற்றார். இந்த வெற்றி பெற்ற மாணவனை நேற்று மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா நேரில் பாராட்டினார். இந்த நிகழ்வின் போது தலைமை ஆசிரியை அமலா, உடற்கல்வி ஆசிரியர் குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.