முத்து உதவும் கரங்கள் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா !

தூத்துக்குடியில் முத்து உதவும் கரங்கள் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-07-09 12:06 GMT

பாராட்டு விழா

தூத்துக்குடியில் முத்து உதவும் கரங்கள் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடியில் முத்து உதவும் கரங்கள் சார்பில், 2023-24 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா கிரசன்ட் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மீராசா மறைக்கார் தலைமை தாங்கினார். ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளர் எம்எஸ்எப் அப்துல் ரகுமான், பள்ளிவாசல் துணை தலைவரும் முத்து உதவும் கரங்கள் செயலாளருமான சாகுல் சிராஜுதீன், முத்து உதவும் கரங்கள் தலைவர் பைசர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் மும்தாஜ் பேகம் மற்றும் முத்து உதவும் கரங்கள் தலைவர் பைசர் ரகுமான் ஆகியோர் வரவேற்று பேசினர். ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அழிம் சிறப்பு துவா செய்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் வேலூர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான M.அப்துல் ரகுமான் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், ஸ்காலர்ஷிப் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினார்.

மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பானு கம்யூனிகேஷன் நிர்வாகிகள் சாகுல் சிராஜுதீன், ஷேக் மீரான், ஆகியோர் குடும்பத்தின் சார்பாக தங்க நாணயம் பரிசாக வழங்கினார். முடிவில் முத்து உதவும் கரங்கள் செயலாளர் சாகுல் சிராஜுதீன் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை பொருளாளர் மூஸா, மன்பவுஸலாஹ் அரபிக் கல்லூரி தலைவர் நவரங் சகாப்தின், கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் முகமது உவைஸ், முத்து உதவும் கரங்கள் பொருளாளர் ஜாபர் சாதிக், துணைத் தலைவர் முகமது சுலைமான், துணைச் செயலாளர் முகமது முஜாஹீத் மற்றும் முகமது இப்ராஹிம், பவான், பாவாஸ், ஆசிக், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக குழு உறுப்பினர் ஆடிட்டர் ஜீபைர், அசிம் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 38 வது மாமன்ற உறுப்பினர் மும்தாஜ், திரேஷ்புரம் மீராசா, இப்ராகிம், முகமது அலி பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பித்தனர்

Tags:    

Similar News