மாநில கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா

சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாநில கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-02-01 05:17 GMT

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவில் மாணவ- மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி வேலூரில் நடந்தது. இதில் 33 மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இறுதியில் சேலம் மாவட்ட மாணவிகள் அணி முதல் இடம் பெற்று வெற்றி பெற்றது. இவர்களுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் பாராட்டு விழா சேலத்தில் நடந்தது. கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி வெற்றி பெற்ற வீராங்கனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். சேலம் மாவட்ட கைப்பந்து கழக ஆலோசகர் விஜயராஜ், செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர் ராஜாராம், இணைச்செயலாளர்கள் பரமசிவம், வேங்கையன், வடிவேல், பயிற்சியாளர் ஹரிகிருஷ்ணன், நிர்வாகிகள் நந்தன், குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News