ஓசூர் அருகே ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு பாராட்டு விழா

ஓசூர் அருகே கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.;

Update: 2024-03-02 12:58 GMT

பாராட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் 

 கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் பணியாற்றி வந்த ராஜண்ணா வெற்றிச்செல்வி, கிருஷ்ணாச்சாரி, இந்திரா, திம்பராயப்பா, தஞ்சா ஆகிய 6 சத்துணவு ஊழியர்கள் இன்று ஓய்வு பெற்றனர்.

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கேசவ மூர்த்தி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சீனிவாச மூர்த்தி. திருமதி சாந்தலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு ஓய்வு பெற்றவர்களுக்கு சால்வைகள் அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்

Advertisement

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கேசவமூர்த்தி பேசும்போது இவர்கள் சிறப்பாக பணியாற்றி பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தரமான உணவுகளை தயாரித்து சுகாதாரமாக வழங்கினார்கள் இவர்கள் பணியில் சேர்ந்த போது குறைவான சம்பளத்தில் சேர்ந்து பணியை சிறப்பாக ஆற்றினார்கள் இவர்களுக்கு என்னால் ஆன உதவிகளை என்றென்றும் செய்வேன், மேலும் அலுவலகத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் சேர்ந்து தருவேன் என்று கூறினார்.

சத்துணவு ஊழியர் சங்கத்துடைய மாவட்ட துணை தலைவர் ராதா, பேசும் போது சத்துணவு ஊழியர்கள் பணியில் சேரும்போது 150 ரூபாய் சம்பளத்தில் பணியில் அமர்ந்தார்கள், ஊதியத்திற்காக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம் சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் 2000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம் பல்வேறு கோரிக்கைகளை வைத்து முதலமைச்சருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. குறைந்த சம்பளத்தில் எங்கள் பணிகளை சிறப்பாக தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News