மாணவிகளுக்கு திறனறிவு தேர்வு போட்டி
நாகையில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு திறனறிவுத்தேர்வு போட்டி நடந்தது.
: நாகை மாவட்ட தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு திறனறிவுத்தேர்வு போட்டி நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு 200 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் தயார் செய்யப்பட்டு 302 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட திறனறிவுத் தேர்வை தகவல் தொழில் நுட்ப அணி தஞ்சை மண்டல பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து மாலை நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவிற்கு தகவல் தொழில் நுட்ப அணி நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.பாரிபாலன் தலைமை தாங்கினார். வேதாரண்யம் நகரக் கழகச் செயலாளர் மா.மீ.புகழேந்தி, ஒன்றியக் கழகச் செயலாளர்கள் வேதாரண்யம் மேற்கு உதயம் வே.முருகையன், வேதாரண்யம் கிழக்கு என்.சதாசிவம், தலைஞாயிறு மகா.குமார், தலைஞாயிறு பேரூர் கழகச் செயலாளர் சி.சுப்பரமணியன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.துரைராஜ், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.செல்வமுத்துகுமரன், பரமேஸ்வரிவெங்கிட், மா.ரெக்ஸ், காந்திமதிலோகநாதன், ஆர்.செந்தில்நாதன், ஆா்.ராபர்ட்கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரிவெங்கிட் வரவேற்றார். காலை நடைபெற்ற திறனறிவுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற முதல் பரிசு பெற்ற மாணவன் அகிலனுக்கு ரூ.10,000, இரண்டாம் பரிசு பெற்ற மாணவி மேனகாவிற்கு ரூ. 7,500, மூன்றாம் பரிசு பெற்ற மாணவி ரூ. 5,000 மற்றும் திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்களை நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தலைவர் என்.கௌதமன், தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசகர் கோவி.லெனின், தகவல் தொழில் நுட்ப அணி தஞ்சை மண்டல பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் ஆகியோர் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் சோ.ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் எல்.எஸ்.ஈ.பழனியப்பன், தகவல் தொழில் நுட்ப அணி திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் எஸ்.வி.டி.அருள், மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவர் வே.கோ.உதயசூரியன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.எஸ்.அசோக், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் செந்தாமரைசெல்வன், மாவட்ட விவசாய அணி தலைவர் சின்னக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்