அறந்தாங்கி- புதுவயல் டவுன் பஸ் மீண்டும் இயக்க வலியுறுத்தல்!
அறந்தாங்கி- புதுவயல் டவுன் பஸ் மீண்டும் இயக்க வலியுறுத்தல்.;
Update: 2024-04-09 05:30 GMT
பஸ் இயக்க வலியுறுத்தல்
திருமயம்: அறந்தாங்கியில் இருந்து போசம்பட்டி, வம்பரம்பட்டி, நல்லாம்பாள் சமுத்திரம், கல்லூர் வழியாக புதுவயலுக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சினால் கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலர்கள், கூலி தொழிலாளர்கள் மிகவும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு கரோனா தாக்கம் காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்ட போது. இந்த பஸ்சும் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் 4 ஆண்டுகள் ஆகியும் பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து மெயின் ரோட்டுக்கு வந்து பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது. நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வலியுறுத்தி கலெக்டர், அமைச்சர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் நம்மூர்ணிப்பட்டி கிராம தலைவர் மணிமுத்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.