அரவக்குறிச்சியில் 9.60 மி.மீ மழை பதிவு
Update: 2023-12-01 15:30 GMT
மழை
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் துவங்கியதை தொடர்ந்து, கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. ஆனால், கரூர் மாவட்டத்தில் லேசான மழை மட்டுமே பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. இந்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. அந்த அறிவிப்பில் அரவக்குறிச்சி பகுதியில் 9.60- மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது எனவும், இதனுடைய சராசரி அளவு 0.80 மில்லி மீட்டர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.