கொசூர் அருகே பணத்தை கேட்டதால் தகராறு: ஒருவர் காயம்

கொசூர் அருகே,கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டதால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயம் அடைந்தார்.;

Update: 2024-01-16 14:18 GMT

கொசூர்

கரூர் மாவட்டம், கொசூர் அருகே உள்ள மத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் வயது 35. இவர் கொசூர் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இதே போல, கரூர் மாவட்டம், குளித்தலை , கொசுர் அருகே தந்தரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். ஜனவரி 14ஆம் தேதி மாலை 6 மணி அளவில், முனியப்பன் அவரது கடையில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த சங்கர், தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. பின்னர், இருவரும் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தையில் பேசி உள்ளனர். அப்போது, சங்கர் முனியப்பனை தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் முனியப்பனுக்கு உள் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக சங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.

Tags:    

Similar News