மதுபோதையில் மனைவியுடன் தகராறு. விஷம் குடித்த முதியவர் உயிரிழப்பு

ஏமூர் அருகே மது அருந்தியதால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு விரக்தியில் விஷம் குடித்த முதியவர் உயிரிழந்தார்.;

Update: 2024-04-29 13:14 GMT

காவல் நிலையம்

கரூர் மாவட்டம், ஏமூர், சீதப்பட்டி வடக்கு காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 70. ஏப்ரல் 27ஆம் தேதி சுப்பிரமணி மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி மது அருந்தி வந்ததால் தகராறு செய்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த சுப்பிரமணி ஏப்ரல் 28ஆம் தேதி காலை 8 மணியளவில், ஏமூர் பகுதியில் உள்ள சிவசாமி என்பவர் தோட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த சுப்பிரமணியன் மகன் செல்வராஜ் உடனடியாக தனது தந்தை சுப்பிரமணியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

Advertisement

அங்கு சிகிச்சையில் இருந்து வந்த சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 28ஆம் தேதி காலை 10 மணியளவில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்

உயிரிழந்த சுப்பிரமணியன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags:    

Similar News