ஜெயங்கொண்டத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்ட ஆட்சியர்
உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஜெயங்கொண்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் அறிவித்த உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தொடர் ஆய்வில் ஈடுபட்டார். அதன்படி ஜெயங்கொண்டம் நகராட்சியில் 6 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யபடும் நாட்களின் விபரம் மற்றும் குடிநீர் விநியோகம் செய்யபடும் நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து ஜெயங்கொண்டம் நகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தினை ஆய்வு செய்தார். பின்னர் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் மேற்கொள்ளபடும் தூய்மை பணிகள் மற்றும் கொசுமருந்து தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டார்.
மேலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா். இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.