சிவகிரி அருகே இராணுவவீரர் விபத்தில் உயிரிழப்பு

பொன்னாங்குடி அருகே சாலை தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-05-29 04:36 GMT

இராணுவ வீரர் சதீஷ்குமார்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி தாலுகாவிற்கு உட்பட்ட தலைவன் கோட்டை கிராமத்தை சேர்ந்த முன்னாள் இராணுவவீரர் பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் சதீஷ்குமார் 24, இவர் அருணாசல பிரதேசத்தில் இராணுவ வீரராக பணியாற்றி கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தவர். இந்த நிலையில் பொன்னாங்குடி அருகே பைக்கில் சென்ற போது சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர் சதீஷ்குமார் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News