அனுமதியின்றி செம்மண் கடத்தியவர் கைது
இண்டூர் சந்திப்பு சாலையில் அனுமதியின்றி செம்மண் கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-05-20 04:09 GMT
மணல் திருட்டு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் பாப்பாரப்பட்டி - இண்டூர் சந்திப்பு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்துமாறு, காவலர்கள் சைகை செய்தனர். காவலர்களை கண்டதும் லாரியை அப்படியே நிறுத்திவிட்டு டிரைவர் ஓட்டம் பிடித்தார்.
இதையடுத்து, காவலர்கள் லாரியில் சோதனையிட்டதில், செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுபற்றி காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரித்து மணல் கடத்தியதாக பென்னாகரம் சின்ன பாப்பிநாயக்கனள்ளி கிராமத்தைச் சேர்ந்த வேல் என்பவரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.