டிராக்டரில் அனுமதி இன்றி மண் கடத்தியவர் கைது
நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் தீபாவுக்கு தகவல் கிடைத்தன் பேரில் ஆய்வு செய்தபோது அப்பகுதியில் வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தார். அதில் அரசு அனுமதியின்றி ஒரு யூனிட் நொரம்பு மண் கடத்தி அந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்;
Update: 2024-02-20 06:24 GMT
காவல்துறை விசாரணை
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டவர்த்தி பகுதியில் நொரம்பு மண் கடத்தப்படுவதாக நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் தீபாவுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் காலை அப்பகுதியில் உள்ள ஏரிக்கு செல்லும் வழியில் ஆய்வுக்காக சென்றிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தார். அதில் அரசு அனுமதியின்றி ஒரு யூனிட் நொரம்பு மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து டிராக்டர் டிரைவர் கள்ளியூரை சேர்ந்த செந்தில் இவருக்கு வயது 43 இவர் மீது, ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுத்தார். அதன்படி காவல்துறையினர் மணல் கடத்திய செந்திலை கைது செய்ததுடன், டிராக்டர் டிரைலரை பறிமுதல் செய்தனர்.