புதுவையில் இருந்து காரில் மதுபாட்டில் கடத்திய 2 வாலிபர்கள் கைது

புதுவையில் இருந்து காரில் மதுபாட்டில் கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2024-01-28 15:59 GMT

கோப்பு படம் 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் பகுதியில், புதுவையில் இருந்து காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்த கலவையை சேர்ந்த 2வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வந்தவாசி அடுத்த தேசூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பூங்காவனம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தெள்ளாலிருந்து தேசூர் நோக்கி வந்த ஒரு காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் புதுவையில் விற்பனை செய்யும் 400 மது பாட்டில்கள் இருப் பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து காரில் வந்த இரண்டு நபர் களை பிடித்து விசாரணை செய்தனர்.

Advertisement

இதில் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகா பாலி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (22), அதே பகுதியை சேர்ந்த சிவா (19) ஆகியோர் என தெரியவந்தது. மேலும், மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து வாலிபர்கள் இருவரையும் வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ் திரேட் செந்தில்குமார் உத்தரவின் பேரில் வந்தவாசி கிளைச்சிறையில் அடைக்கப் பட்டனர்.

Tags:    

Similar News