மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தவர் கைது
தர்மபுரி மாவட்டம், பந்தரஅள்ளி அருகே செல்லியம்மன் கோவில் பகுதியில் மதுபானங்களை சட்டவிரோதமாக பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-05-08 01:39 GMT
மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தவர் கைது
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பகுதியில் உள்ள பந்தரஅள்ளியில் நேற்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது செல்லியம்மன் கோவில் அருகே சரவணன் வயது 36 என்பவர் மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. சுமார் 36 மது பாட்டில்களை காரிமங்கலம் காவல்துறையினர் சரவணன் இடமிருந்து பறிமுதல் செய்தனர் மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.