மூதாட்டியிடம் பணம் திருடியவர் கைது
திருநெல்வேலி மாவட்டம், கூனியூர் பகுதியில் மூதாட்டியின் பணத்தை திருடியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-04-27 04:16 GMT
பணம் திருடியவர் கைது
திருநெல்வேலி மாவட்டம், கூனியூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேவனியம்மாள் (70) வீட்டில் தனியாக இருந்து கூலி வேலை செய்து வருகிறார்.இவர் பீரோவில் வைத்திருந்த ரூபாய் 9000 பணத்தை கடந்த 22ம் தேதி காணவில்லை. இதுகுறித்து சேவனியம்மாள் அளித்த புகாரின் பேரில் அம்பை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெள்ளபாண்டி (27) என்பவர் பணத்தை திருடியது தெரிய வந்ததை தொடர்ந்து வெள்ளபாண்டியை போலிசார் கைது செய்தனர்.