செங்கம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய 4 பேர் கைது

திருடா முயன்ற நான்கு நபர்களை கிராம மக்கள் காவல்துறையில் ஒப்படைப்பு.

Update: 2024-04-05 04:57 GMT

கைது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பேயாலம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் மணிகண்டன். இவர் கோயில்களில் குறி சொல்லுதல் மற்றும் உணவகங்களில் கூலி வேலையும் செய்து வந்துள்ளார். இவருக்கு, தஞ்சாவூரைச் சேர்ந்த செங்குட்டவன் மகன் மணிகண்டன் என்ற திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தாலிகட்டிக்கொண்டு பேயாலம்பட்டு பகுதியில் வசித்து வந்துள்ளனர். மேலும், ஜவ்வாதுமலை கிளையூர் கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை திருப்பதியும், நாகபட்டினத்தைச் சேர்ந்த திருநங்கை தினேஷும் திருமணம் செய்துகொண்டு, பேயாலம்பட்டு மணிகண்டன் குடும்பத்துடன் இணைந்து நான்கு பேரும் ஒரே வீட்டில் சில தினங்களாக தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் அதே பகுதியில் விவசாய நிலத்தில் வீடு கட்டி தனியாக 1 விருப்புமேலும், ஜவ்வாதுமலை கிளையூர் கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை திருப்பதியும், நாகபட்டினத்தைச் சேர்ந்த திருநங்கை தினேஷும் திருமணம் செய்துகொண்டு, பேயாலம்பட்டு மணிகண்டன் குடும்பத்துடன் இணைந்து நான்கு பேரும் ஒரே வீட்டில் சில தினங்களாக தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் அதே பகுதியில் விவசாய நிலத்தில் வீடு கட்டி தனியாக விவசாய நிலத்தில் வீடு கட்டி தனியாக வசித்து வரும் சந்தோஷம் (50) என்பவரது வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே பீரோவில் இருந்த வெள்ளிக் கொலுசு மற்றும் ரொக்கம் ரூ.2 ஆயிரத்தை திருடியுள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதி விவசாயி ஒருவர் ஊர்மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார். இளைஞர்கள் சிலர் அங்கு விரைந்து சென்று அவர்களை விரட்டிப் பிடித்து தாக்கி செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து நான்கு பேரையும் ஒப்படைத்தனர். காவல் ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப் பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News