தாராபுரம் மார்கட்டுக்கு ஆந்திராவில் இருந்து தக்காளி வருகை

தொடர் மலையால் விளைச்சல் பாதிப்பு தாராபுரம் மார்க்கெட்டுக்கு ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து கிலோ ரூ 60-க்கு விற்பனை

Update: 2024-05-28 16:05 GMT

கோப்பு படம் 

தாராபுரம் பகுதியில் தொடர் மழை காரணமாக தக்காளி வரத்து இல்லாத காரணத்தினால் ஆந்திராவிலிருந்து கொண்டுவந்து விற்பனை நடைபெறுகின்றது.தாராபுரம் பழைய அமராவதி,புதிய அமராவதி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

இந்தாண்டு அண்மையில் பெய்த மழை காரணமாக சாகுபடி செய்த தக்காளி செடிகள் அழுகி சேதமடைந்தன.இதனால் உள்ளூர் வரத்து நின்றது. தற்போது ஆந்திரா மாநிலம் குப்பம்,வி.கோட்டா ,புங்கனூர்,பழமனேரி ,மதனப்பள்ளி பகுதிகளிலிருந்து லாரிகள் மூலம் தக்காளி தாராபுரம் மார்க்கெட்டுக்கு வரத்து வருகிறது.

27 கிலோ பாக்ஸ் ரூ. 1300க்கு விற்பனை ஆகிறது.சில்லரை விற்பனையில் கிலோ ரூபாய் 60 க்கு விற்பனையாவதாக வியாபாரி சுப்பிரமணியன் கூறினார்.இந்த நிலை ஒரு மாதத்திற்கு நீடிக்கும் எனத்தெரிகிறது.

Tags:    

Similar News