ஆணவங்கள் இன்றி கொண்டு வந்த ரொக்க பணம் பறிமுதல் !
ஆணவங்கள் இன்றி கொண்டு வந்த ரூ. 2,6150-ஐ பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-03-18 09:45 GMT
ஆணவங்கள் இன்றி கொண்டு வந்த ரூ. 2,6150-ஐ பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல். நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் மாலை முதல் அமலுக்கு வந்த நிலையில், கரூர் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் காவல்துறையினர் பல்வேறு கட்ட சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்படும் ரொக்க பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்க கேட் பகுதியில் நேற்று இரவு பறக்கும் படை அலுவலர் சண்முகசுந்தரம் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கரூரை அடுத்த ராயனூர் பகுதியில் செயல்படும் மளிகை கடையில் பணியாற்றும் சரவணன் என்பவர், இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 2 லட்சத்து 6150 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து, பின்னர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முனிராஜிடம் பணத்தை ஒப்படைத்தனர். கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி பல லட்ச கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.