மாற்று திறனாளிகளுக்கு செயற்கைக்கால், கை வழங்கும் விழா

இராசிபுரம் அரிமா சங்கம் மற்றும் ஈரோடு ஜீவன் ஜோதி டிரஸ்ட் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு செயற்கைக்கால் மற்றும் கை வழங்கும் விழா நடைபெற்றது.;

Update: 2024-02-11 05:27 GMT

மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பல்வேறு சமூக அமைப்புகள் தொடர்ந்து அவர்களுக்கு சேவை நோக்கத்தோடு பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு செய்து வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அரிமா சங்கம் மற்றும் ஈரோடு ஜீவன் ஜோதி டிரஸ்ட் இணைந்து நடத்திய மாற்று திறனாளிகளுக்கு செயற்கைக்கால், கை பொருத்தும் விழா ராசிபுரம் அரிமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் 100.க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சேலம், நாமக்கல், கடலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

Advertisement

பயனாளிகளின் கால் மற்றும் கை அளவுகளை எடுத்து அவர்களுக்கு தகுந்தார் போல் சிகிச்சை மேற்கொண்டு உபகரணங்கள் அளவெடுத்து வழங்கப்பட்டது. இதில் அரிமா தலைவர் லயன் எஸ்.அரங்கசாமி தலைமை வகித்தார். இவ்விழாவில் செயலாளர் லயன் வி.பி.சுப்ரமணியம் மற்றும் முருகேசன், பொருளாளர் லயன் ஆர். மனோகரன், வட்டாரத் தலைவர் லயன் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் மாதேஸ்வரன், முன்னாள் மாவட்ட தலைவர் இராகவன், ராஜமாணிக்கம், வைத்தியலிங்கம், தமிழரசன், சக்திதாஸ், கணேசன், பாலகிருஷ்ணன் மற்றும் மேற்பார்வையாளர்கள், சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள், என பலர் கலந்து கொண்டனர். மேலும் நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு அளவெடுத்து பின்பு அவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழாவை விரைவில் பெரிய விழாவாக ஏற்பாடு செய்து பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அரிமா சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News