கலைத் திருவிழா - 392 மாணவர்களுக்கு பரிசளிப்பு
பெரம்பலூர் மாவட்ட கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற 392 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட அளவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற கலைத் திருவிழா நடணம், கட்சிக்கலை, மொழித்திறன்,நாடகம் சார்ந்த 142 போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் பரிசளிப்பு விழா பிப்ரவரி 10ம் தேதி பெரம்பலூர் - துறையூர் சாலையில் அமைந்துள்ள சாரணர் கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை யேற்று நடத்திய நிகழ்ச்சியில்..ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர் வரவேற்புரையாற்றினர்,
இடைநிலை மாவட்டக் கல்வி அலுவலர் ஜெகநாதன் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அண்ணாதுரை வாழ்த்துரை வழங்கினர். இதனை தொடர்ந்து கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 48 அரசுப் பள்ளிகளைச் சார்ந்த 392 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார மேற்பார்வையாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் , இல்லம் தேடிக் கல்வி ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு கல்வி புத்தாய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக தொடக்கக் கல்வி உதவித் திட்ட அலுவலர் ரமேஷ் நன்றியுரை கூறினார்.