ரிஷிவந்தியத்தில் ஆருத்ரா தரிசனம்
ரிஷிவந்தியம் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Update: 2023-12-28 06:51 GMT
ரிஷிவந்தியம் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று காலை மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனாபிஷேகமும், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. பின் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், விபூதி, திருமஞ்சனம் உட்பட 18 வகையான விசேஷ பொருட்களை கொண்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் நடராஜர், சிவகாமசுந்தரி சுவாமிகளை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவில் உட்பிரகார வலம் வந்தனர். கோவில் குருக்கள் நாகராஜ், சோமு ஆகியோர் பூஜைகளை செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.