ஆருத்ரா தரிசனம்... சுகவனேஸ்வரர் கோவிலில் மகாபிஷேகம்

Update: 2023-12-21 16:13 GMT

தமிழகம் முழுவதும் உள்ள' சிவன், அம்மன், விநாயகர், முருகன், நடராஜர் கோயிலில் வரும் 27ம்தேதி ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 26ம் தேதி காலை 10.30 மணி முதல் 12 மணி வரை திருக்கல்யாணமும், இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷபவாகனத்தில் சோமாஸ். கந்தர் திருவீதி உலாவும் நடக்கிறது.

இரவு 12.15 மணியளவில் நடராஜர் மகா அபிஷேகம் தொடங்கி 27ம் தேதி காலை 6 மணி வரை நடக்கிறது. இவ்விழா தொடர்ச்சியாக காலை 7 மணிக்கு கிழக்கு ராஜகோபுரம் முன்பாக ஆருத்ரா தரிசன காட்சியும், மூலவர் சுகவனேஸ்வரருக்கு தங்க நாகாபரணமும், அம்மனுக்கு தங்க கவசம்'சாத்துப்படியும் செய்யப்டடுகிறது. காலை 9 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் திருவீதி உலாவும், இரவு 7 மணிக்கு ஊடல் உற்சவ நிகழ்ச்சியும், 28ம் தேதி பிராயசித்த அபிஷேகம், வசந்த உற்சவமும் நடக்கிறது. 26ம் தேதி இரவு 12.15 மணிக்கு தொடங்கி 27ம் தேதி காலை 6 மணி வரை நடராஜர் சுவாமிக்கு நடைபெறும் அபிஷேகத்தினை பக்தர்கள் யூடியூப், பேஸ்புக் மூலம் காணலாம். யூடியூப் சேனல் வழியாக நேரலையில் கண்டு வழிபட கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பக்தர்களும், பொதுமக்களும் அவரவர் இடங்களிலிருந்தே பயன்படுத்தி வழிபாடு செய்து கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News