அருள்மிகு மகா மாரியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
வலங்கைமான் அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-03-27 09:13 GMT
வலங்கைமான் அருள்மிகு மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வலங்கைமான் அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சாலை வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதானத்தை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள், மத்திய ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவர் டி கணேசன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். உடன் விஸ்வநாதன் அவர்கள் பத்மநாபன் அவர்கள் பகுதி செயலாளர் கேசவன் அவர்கள் உள்ளனர்.