சிவசுப்பிரமணியசாமி திருக்கோவிலில் அருணகிரிநாதர் குருபூஜை விழா
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அருணகிரிநாதர் குருபூஜை விழா சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது.;
Update: 2024-06-22 06:46 GMT
சிவசுப்பிரமணியசாமி திருக்கோவிலில் அருணகிரிநாதர் குருபூஜை விழா
தர்மபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள குமாரசாமி பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று ஆனித் திங்கள் 08 ஆம் நாள் 22-06-2024 சனிக்கிழமை ஆனி மூல நட்சத்திரம் அருணகிரிநாதர் குருபூஜை வைபவத்தை முன்னிட்டு காலை 7.30 மணியளவில் மூலவர் ஆறுமுகப் பெருமானுக்கு விஷேச அபிஷேகம் அலங்காரம் சோடச உபசாரம் வேத பாராயணம் திரவிட ஸ்துதி பாராயணம் மஹா தீபாராதனையும் அதனைத்தொடர்ந்து திருநெறிய தெய்வத் தமிழ் வழிபாட்டு சபையினரால் திருப்புகழ் பாராயணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் சென்ற இடமெல்லாம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.