கோவிலூரில் சாம்பல் புதன் தினம் அனுசரிப்பு

கோவிலூர் புனித சவேரியார் திருத்தலத்தில் சாம்பல் புதன் தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2024-02-14 03:52 GMT
உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இன்று சாம்பல் புதன் என்று அழைக்கப்படும் விபூதி புதன் தினத்தை அனுசரித்து வருகின்றனர் இன்று முதல் ஈஸ்டர் திருவிழா வரை 40 நாட்கள் நோன்பு விரதம் கடைப்பிடிக்கின்றனர். இதனை அடுத்து தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் திருத்தலத்தில் இன்று சாம்பல் புதன் தினம் அனுசரிக்கப்பட்டது. இன்று முதல் 40 நாட்களுக்கு தவக்காலம் விரத நோன்பு தொடங்குகிறது. இன்று காலை சிறப்பு திருப்பலி பங்குத்தந்தை ஆரோக்கியசாமி நிறைவேற்றி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் நெற்றியில் சிலுவை அடையாளத்துடன் சாம்பலை பூசினார் இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News