அசாம் வாலிபர் தற்கொலை - போலீஸ் விசாரணை
கடம்பூர் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அசாம் வாலிபர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-03-01 07:02 GMT
தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரில் உள்ள சோலார் மின் நிலையத்தில் சிரில் எக்கா மகன் ஜெயிமாச்சே எக்கா (45) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடம்பூர் ரயில் நிலையம் அருகே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அங்குள்ள வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து கடம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்று கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.