குடிபோதையில் இளைஞர் மீது தாக்குதல் - தப்பியோடியவர்கள் மீது வழக்குப்பதிவு.
கோவையில் குடிபோதையில் இளைஞரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்.;
Update: 2024-02-27 06:42 GMT
FIR
கோவை:சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த ஸ்ரீஹரி(20) குடும்பத்தினருடன் சுயதொழில் செய்து வருகிறார்.சம்பவத்தன்று மதியம் ஆவரம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் தனது நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார்.அப்போது அங்கு மது அருந்தி கொணிருந்த மூவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.மது அருந்திவிட்டு வெளியே வந்த ஸ்ரீஹரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருடன் வாக்குவாதம் செய்த மூன்று பேர் ஸ்ரீஹரியை தடுத்து நிறுத்து மீண்டும் தகராறில் ஈடுபட்டதுடம் அவரது முகத்தில் தாக்கியதில் அவரது உதடு கிழிந்து ரத்தம் வழிந்த நிலையில் வலியால் அலறி உள்ளார்.தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடிய நிலையில் அங்கிருந்தவர்கள் ஸ்ரீஹரியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காட்டூர் போலீசார்இளைஞரை தாக்கி தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்.