டிரீட் கொடுக்கலைனா அடிதான் : கணவன்,மனைவி மீது தாக்குதல்

ஆரல்வாய்மொழியில் புதிய ஆட்டோ வாங்கியதற்கு மது விருந்து கொடுக்காததால் கணவன்,மனைவியை தாக்கி வாகனங்களை சேதப்படுத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;

Update: 2024-04-24 03:46 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி எம் ஜி ஆர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (52) கட்டிடத் தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா (48). கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் வங்கி கடன் மூலம் புதிதாக ஆட்டோ ஒன்று வாங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் (25),சாம்ராஜ் (20 ),, ஸ்டார்வின் (24) ஆகியோர் மணிகண்டன் வீட்டிற்கு சென்று புதிதாக ஆட்டோ வாங்கியதற்கு மது விருந்து கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது.  

Advertisement

 அப்போது மதன்குமார் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து மணிகண்டனை தாக்கி, அங்கு நின்ற இரு சக்கர வாகனம் ஆட்டோ ஆகியவற்றின் கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் வீட்டுக்குள் புகுந்து டிவியை அடித்து சேதப்படுத்தினர்.    இதை தடுக்க வந்த மணிகண்டனின் மனைவி அமுதாவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் காயம் அடைந்த கணவன் மனைவி இருவரும் பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்த புகார் பேரில் மதன்குமார் சாம்ராஜ், ஸ்டார்வின் ஆகியோர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News