தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல்: மனு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபை தமிழ்நாடு சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.;

Update: 2024-01-30 12:22 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகாவில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த செய்தியாளர் நேசபிரபு என்பவர் கடந்த புதன்கிழமை 24.01.2024 அன்று இரவு மர்ம நபர்களால் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாகி உயிருக்கு போராடிய நிலையில் தற்போது பலத்த காயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

மேற்படி செய்தியாளர் மீதான இந்த கொலைவெறி தாக்குதல் ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும். இந்த செய்தியாளர் மீதான இந்த கொலைவெறி தாக்குதலை “தேவேந்திரரர் மக்கள் சபை வன்மையாக கண்டிக்கிறது.

Advertisement

மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுபோன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். மேற்படி செய்தியாளர் நேசபிரபு மீதான கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல்களை உடனயடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கவும், மேற்படி கொலைக்கும்பலுக்கு பின்னனியில் உள்ள மாஃபியாக்களை அடையாளம் கண்டு அவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும்,

கொலைவெறிதாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் நேசபிரபுவுக்கு தனியார் மருத்துமனையில் அரசு செலவில் சிகிச்சை வழங்கிடவும், ஊடகவியலாளர் நேசபிரபுக்கு 25லட்சம் இழப்பீடு வழங்கி, ஐனநாயத்தின் தூண்களில் ஒன்றான ஊடகவியாளர்களின் பாதுகாப்நை உறுதிசெய்ய மத்திய அரசு தனிச்சட்டம் இயற்றவும் தமிழக முதல்வர் அவர்களும்.

பாரத பிரதமர் அவர்களும் ஆவண செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையுடன் "தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபைதமிழ்நாடு அதன் நிறுவனத் தலைவர் ராமர் பாண்டியர் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags:    

Similar News