ஏலச்சீட்டில் கட்டிய பணத்தை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்
ஏலச்சீட்டில் கட்டிய பணத்தை திருப்பி கேட்டதால் பெண்ணை தகாத வார்த்தை பேசி துன்புறுத்திய முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, உப்பிடமங்கலம், வடக்கு கேட் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகள் கலைச்செல்வி வயது 44. அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அண்ணாவி வயது 65. என்ற முதியவர் அப்பகுதியில் ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார்.
இந்த ஏல சீட்டில் கலைச்செல்வியும் சேர்ந்து செலுத்த வேண்டிய முழுத் தொகையும் செலுத்தி உள்ளார். ஏல சீட்டு நிறைவு பெற்ற நிலையில் கலைச்செல்விக்கு பணத்தை வழங்காமல், அலைக்கழித்துள்ளார் அண்ணாவி. இந்த நிலையில் மே 7-ம் தேதி மாலை 4 மணியளவில் அண்ணாவியை சந்தித்து, தனக்கு கொடுக்க வேண்டிய ஏல சீட்டு பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார் கலைச்செல்வி. அண்ணாவி பணம் தர மறுத்துள்ளார்.
மேலும், கலைச்செல்வியை தகாத வார்த்தை பேசி துன்புறுத்தி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கலைச்செல்வி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அண்ணாவி மீது நேற்று மாலை வழக்கு பதிவு செய்துள்ளனர் வெளியணை காவல்துறையினர்.