சிவகங்கையில் பேரவை கூட்டம்

சிவகங்கையில் பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க பேரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2024-02-04 10:47 GMT

பேரவை கூட்டம்

சிவகங்கையில் பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கல்வித்துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் அமைச்சு பணியாளர்கள் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு தேர்வு பாகம் 1 முடித்தவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.

இளநிலை உதவியாளர்களின் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள நேரடி உதவியாளர் பணி நியமனத்தை நிறுத்திவிட்டு நாளது தேதி வரை பதவி உயர்வு பெறாமல் உள்ள இளநிலை உதவியாளர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News