மானியம் பெற விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் அறிவிப்பு
தர்மபுரி விவசாயிகள் ஏக்கருக்கு 700 கோடை உழவு மானியமாக வழங்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குநர் அறிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் கிருஷ்ணாபுரத்தில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வேளாண் இடுபொருட்களை பெற்று விவசாயிகள் பயன்பெறுமாறு தருமபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மு.இளங்கோவன் தெரிவித்து உள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது: தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் (சிறுதானியம் ), உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டம் (பயறு வகை) மற்றும் விதை கிராம திட்டத்தின் கீழ் இராகி, சாமை, துவரை, உளுந்து, காராமணி, பாசிபயறு ஆகிய விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம்.
இதேபோல் முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் உழவு மானியத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.500 மற்றும் சாகுபடி செய்வதற்கு தேவையான உளுந்து, சோளம், நிலக்கடலை, எள் போன்ற விதைகள் வாங்குவதற்கு ரூ.700 மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு கிராம திட்டத்தின் கீழ் ஒரு பயிர் சாகுபடிக்கு எள், நெல், சூரியகாந்தி, நிலக்கடலை ஆகிய விதைகள் மற்றும் இயற்கை உர இடுபொருட்கள் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகள் பெற்று பயன்பெறலாம். மேலும் வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் (தேக்கு, பூவரசு. மகாகனி, செம்மரம்) ஆகிய கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆகவே தங்களுக்கு தேவையான மானிய திட்டங்களை பெறுவதற்கு தங்களுக்கான உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இதில் அளேதருமபுரி மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் 9443045959 என்ற கைபேசி எண்ணில் உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி, மிட்டாறுலஹள்ளி மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் 7010865280 என்ற கைபேசி எண்ணில் உதவி வேளாண்மை அலுவலர் பச்சமுத்து, நல்லனஹள்ளி மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் 7010894028 என்ற கைபேசியில் உதவி வேளண்மை அலுவலர் சுப்ரமணியன், கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் 7010251169 என்ற கைபேசியில் உதவி வேளண்மை அலுவலர் நாகமணி, திப்பிரெட்டிஹள்ளி மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் 9865069678 என்ற கைபேசி எண்ணிற்கு உதவி வேளண்மை அலுவலர் மணிவண்ணன் ஆகியோருக்கு தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும். இதேபோல் விவசாயிகள் அனைவரும் அரசு மானிய உதவி பெறுவதற்கு மண் மற்றும் நீர் பரிசோதனை செய்து மண் வள அடையாள அட்டை பெற்று சாகுபடியை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.