பள்ளப்பாளையத்தில் திமுகவினருக்கு, பொட்டு வைத்த கிராம மக்கள்
பள்ளபாலையத்தில் போதும்,போதும் என்ற அளவிற்கு, திமுகவினருக்கு, பொட்டு வைத்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பள்ளபாளையம் பகுதியில் உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. அவருடன் திமுக கட்சியை நிர்வாகிகள், பல்வேறு அணிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் உடன் வந்தனர்.
இவர்களுக்கு, பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கும் விதமாக, ஆரத்தி எடுத்து, பொட்டு வைத்தனர். அப்போது கிராம மக்கள் வரிசையாக நின்ற எம் எல் ஏ சிவகாமசுந்தரி உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகளுக்கு வரிசையாக சென்ற கிராம மக்கள் ஒவ்வொருவரும் ஆரத்தி எடுத்து ஒவ்வொருவருக்கும் பொட்டு வைத்தனர்.
அப்போது திமுகவினர் போதும், போதும், பொட்டு வைத்தது போதும் என, சொல்லும் அளவிற்கு கிராம மக்கள் பொட்டு வைத்ததால் பரபரப்பு நிலவியது.