ஆத்தூர்: கரும்பு பாரம் ஏற்றி சென்ற பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து

ஆத்தூர்: கரும்பு பாரம் ஏற்றி சென்ற பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து

Update: 2024-04-23 06:05 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை செல்லும் சாலையில் மலையாளப்பட்டி கிராமத்தில் சோதனை சாவடி அருகே கருமந்துறையில் இருந்து வாழப்பாடி நோக்கி கரும்பு ஏற்றுக்கொண்டு பொலிரோ பிக்கப்வாகனம் சென்றது. அதனை தர்மலிங்கம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார் அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பொலிரோ பிக்கப் வாகனம் திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கரும்பு பாரத்தோடு கலைக்குப்புற கவிழ்ந்தது. கூலி தொழிலாளிகளான தும்பல் பகுதியைச் சேர்ந்த ராஜா, மாதையன் (55) மலர் (55) படுகாயம் அடைந்தனர் அவர்களை தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ௯லித்தொழிலாளிகளான வசந்தா (40), மணிமணி (40) செல்வராஜ் (52) செல்வம் (56), பொன்னுசாமி (50),சின்னப் பையன் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News