ஆத்தூர் : விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு

பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பெண் தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

Update: 2024-04-18 06:01 GMT


பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பெண் தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் அன்பழகன் மனைவி செல்வி இவர் அப்பகுதியில் உள்ள விவசாயத் தொட்ட பகுதிக்கு சென்றபோது தவறி அருகே 50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளார்.

உடனடியாக அவளியாகச் சென்ற பொதுமக்கள் சத்தம் கேட்டு சென்று பார்க்கவே 50 அடி ஆழமுள்ள கிணற்றில் பெண் இருப்பதை அறிந்த பகுதி மக்கள் உடனடியாக வாழப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் வீர்ர்கள் சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த பெண் உயிருடன் பத்திரமாக மீட்டனர் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News