ஆத்தூர்: அதிமுக எம்எல்ஏ, திமுக வேட்பாளர் கைகுலுக்கி பரஸ்பரம்
ஆத்தூரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் கைகுலுக்கி பரஸ்பர வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.;
Update: 2024-04-19 06:54 GMT
வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட அதிமுக எம்.எல்.ஏ மற்றும் திமுக வேட்பாளர்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்திநகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் (அதிமுக) தனது வாக்குப்பதிவு பதிவு செய்ய வந்திருந்தார் அப்போது கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வாக்குப்பதிவு மையத்தை பார்வையிட வந்தார். தொடர்ந்து ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசந்திரன் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களை தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் ஆகியோர் பரஸ்பரம் கை குலுக்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.