ஆத்தூர் : கல்பகனூரில் நூலகம் கட்ட பூமி பூஜை
ஆத்தூர் அருகே கல்பகனூர் ஊராட்சியில் மூலதன முதலீட்டு மான்ய நிதியில் ரூ.22.00 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டிடம் கட்டுவதற்கான;
By : King 24X7 News (B)
Update: 2024-03-07 10:34 GMT
பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், கல்பகனூர் ஊராட்சியில் மூலதன முதலீட்டு மான்ய நிதியில் ரூ.22.00 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டிடம் கட்டுவதற்கான பணியினை ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர்.வே. செழியன் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
கல்பகனூர் ஊராட்சி தலைவர் ராசாத்தி காளிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொறியாளர் விசுவநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் பூவாயி பச்சமுத்து, ஊராட்சி துணைத் தலைவர் செல்வம்,கழக நிர்வாகிகள் பெருமாள், இளங்கோ, ராஜேந்திரன், லோகநாதன், சுப்பிரமணி, பழனிசாமி, மதியழகன், புதூர் லோகநாதன், அண்ணாதுரை, முருகன் உள்ளிட்டோரும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.