ஆத்தூர் :அடிப்படை வசதிகள் இல்லாததால் வரி கட்ட மறுத்த பொதுமக்கள் !
ஆத்தூர் அருகே அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை செய்து தராதவை கண்டித்து வீட்டு வரி குடிநீர் வரி வசூல் செய்ய வந்த நகராட்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
By : King 24x7 Angel
Update: 2024-03-11 07:03 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் 13 வது வார்டு பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு சாக்கடை,சாலைவசதி,குடிநீர், அமைக்கவும், சில இடங்களில் அமைத்த சாக்கடைகளிலிந்து வரும் கழிவுநீர் வெளியே செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் பல முறை தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படாததால் அப்பகுதிக்கு குடிநீர் மற்றும் வீட்டு வரி வசூல் செய்ய வந்த நகராட்சி அலுவலர்களிடம் வீட்டு வரி குடிநீர் வரி உள்ள வரிகளை செலுத்த முடியாது என்றும் முறையாக எங்களது அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் மட்டுமே வரி செலுத்த முடியும் என்றும் பகுதி மக்கள் நகராட்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதி மக்கள் அனைவரும் திரண்டதால் வசூல் செய்ய வந்த நகராட்சி அலுவலர்கள் வசூல் செய்யாமல் அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் எங்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யாவிட்டால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என இவ்வாறு தெரிவித்தனர்.