ஆத்தூர்: தேமுதிக கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை ௯ட்டம்
சி ஏ ஏ சட்டம் மூலம் நாட்டு மக்களை பாஜக அரசு பிளவு படுத்த துடிப்பதை ஏற்க முடியாது.பாஜக என்றாலே மதவாத கட்சி என்று மக்கள் அச்சப்படுகின்ற சூழல் இருப்பதாகவும் ஆத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் தேமுதிக கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை ௯ட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Update: 2024-03-13 03:19 GMT
சேலம் மாவட்டம்,ஆத்தூரில் தேமுதிக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தேமுதிக சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி ஆக்க பணிகள் குறித்து விவாதித்தனர். கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதில்மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்திற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அல்லது அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் போட்டியிட வேண்டும்.கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.