ஆத்தூர் : தாகம் தணிக்க திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

ஆத்தூர் நகரப் பகுதியில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் திறந்து வைத்து கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்க பொது மக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, கம்மங்கூழ் ஆகியவற்றை வழங்கினார்.

Update: 2024-05-01 08:06 GMT

தமிழக முழுவதும் கோடை வெயிலின் வெப்பம் அதிகரித்துவர் மலையில் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் இந்நிலையில் அரசியல் கட்சியைச் சார்ந்த அமைப்புகள் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தலை திறந்து பொது மக்களுக்கு வழங்க அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் திமுக சார்பில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் எஸ் சிவலிங்கம் தலைமையில் ஆத்தூர் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நீர்மோர் தர்பூசணி கம்மங்கூழ் உள்ளிட்ட பழவகைகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் எஸ் சிவலிங்கம் நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நகர மன்ற தலைவர் உள்ளிட்ட மாவட்ட நகர திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News