ஆத்தூர் : அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு
ஆத்தூரில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலை பாதுகாப்பாக நடத்தவும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் பதட்டமான வாக்குசாவடி பகுதியில் காவல்துறை, துணை ராணுவம் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊரக காவல்நிலையத்திற்க்கு உட்பட்ட காட்டுக்கோட்டை, கல்லாநத்தம், அம்மம்பாளையம், ராமநாயக்கன்பாளையம், கல்பகனூர், கொத்தம்பாடி பகுதியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ஆத்தூர் காவல்துணை கண்காணிப்பாளர் சதிஸ்குமார் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பில் கலந்துக்கொண்டனர்.
இந்த அணி வகுப்பில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 19 கம்பெனி ஆர்மி ரிசர்வ் படையினர் கூடுதல் எஸ் பி மஞ்சுரூலா மேத்தா தலைமையில் 78 பேர் மற்றும் போலீசார் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.தேர்தல் பாதுகாப்பாக நடப்பதற்காகவும், தேர்தலில் பொதுமக்கள் எந்த வித அச்சமும் இன்றி 100% வாக்களிக்க காவல்துறை உறுதுணையாக இருப்பதை உணர்த்தும் விதமாக துப்பாக்கி ஏந்தியவாறு கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் பூர்ணிமா, நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார், வீரகனூர் காவல் ஆய்வாளர் காந்திமதி உள்ளிட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.