ஆத்தூர் : குடும்பத்தகராறில் கணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
அதிகளவில் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளதால் கணவன் மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை உடலை கைப்பற்றி ஊரக போலீசார் விசாரணை.
Update: 2024-02-20 15:21 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீமநாயக்கர் மகன் ராமலிங்கம் (45). இவர் தண்ணீர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார், இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளநிலையில் ராமலிங்கத்திற்கு அதிகளவில் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் வழக்கம் போல் இன்று அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இதனை அடுத்து வெளியே சென்ற மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கணவன் ராமலிங்கம் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் ஊரக போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.