ஆத்தூர்: 3 நாட்களுக்கு முன் காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு
ஆத்தூர் அருகே கீரிப்பட்டியில் மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து மல்லியகரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கீரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் முருகேசன் (56). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவியும் மகனும் உள்ள நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் திடீரென முருகேசன் காணாமல் போய் உள்ளார். இது குறித்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் முருகேசன் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தண்ணிர் இல்லாத வறண்ட விவசாய கிணற்று பகுதியில் துர்நாற்றம் வீசு உள்ளதால் அப்பகுதியினர் சென்று பார்க்கும் போது ஒருவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக மல்லியகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அதன் அடிப்படையில் மல்லியகரை போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து பின்னர் தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டனர்.
விசாரணையில் மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போன முருகேசன் இறந்து கிடந்த்து தெரியவந்தது. உடலை கைப்பற்றிய மல்லியகரை போலீசார் உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மல்லியகரை போலீசார் விசாரணை