ஆத்தூர்: மூன்று தொகுதி தேர்தல் மண்டல அலுவலர்கள் பயிற்சி வகுப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்று மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-06 04:00 GMT

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்று மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷர்வன்குமார் கலந்து கொண்டு தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது வாக்குப்பதிவின்போது அலுவலர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் ஒருவர் தவறு செய்தால் அனைத்தும் தவறாகிவிடும்.

எனவே அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும் சரியான நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கப்பட வேண்டும்.உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே வாக்களிக்கும் வசதி வரும் திங்கட்கிழமை முதல் அதற்கான பணிகள் தொடங்குகிறது .

மேலும் தொகுதிக்கு ஏழு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இதுவரை 67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தேர்தலை சுமூகமாக நடைபெற பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.மேலும் பதட்டமான வாக்கு சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி ஆத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட வட்டாட்சியர் வருவாய் துறையினர் பங்கேற்பு

Tags:    

Similar News