ஆத்தூர் : முதல்வர் தேர்தல் பரப்புரையால் போக்குவரத்து பாதிப்பு

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-31 06:09 GMT

 மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் பங்கேற்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் பரப்பரை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க லட்சக்கணக்கான திமுகவினர் பேருந்துகளில் வருகை புரிந்ததால் நேற்று இரவு சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News