காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல் - எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் நலம் விசாரிப்பு

பாஜகவினரால் தாக்கப்பட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் பிரமுகரை சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.;

Update: 2024-04-24 02:19 GMT

நலம் விசாரிப்பு 

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் ததேயுஸ் .பாஜக முன்னாள் மீனவ ரணி மாவட்ட செயலாளர். இவர் கடந்த 19 ம் தேதி நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது பாஜக வெளி ஏஜெண்டாக இருந்துள்ளார். காலை 8 மணியளவில் தூத்தூர் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி ஆதரவாளர் ததேயுஸ் என்பவர் கள்ள ஓட்டு போட வந்ததாக கிடைத்த தகவலின் பேரில் பாஜக வை சேர்ந்த ததேயுஸ் தடுத்து நிறுத்தி உள்ளார்.

இதன் பின்னர் ததேயுஸ் வீட்டுக்கு சென்று கொண் டிருந்த போது அகத்தம்மாள் குருசடி பகுதியில் வைத்து காங்கிரஸ் ஆதரவாளர் ததேயுஸ் மற்றும் கண்டால் தெரியும் 4 பேர் சேர்ந்து தடுத்து நிறுத்தி தாக்கி காயம் ஏற்படுத்தி யுள்ளனர். இது சம்பந்தமாக ததேயுஸ் கொடுத்த புகார் மீது நித்திரவிளை போலீசார் காங்கிரஸ் ஆதரவாளர் ததேயுஸ் மற்றும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

Advertisement

இந்நிலையில் இரவு காங்கிரஸ் ஆதரவாளர் ததேயுஸ் பைக்கில் வந்து கொண்டிருந்தார். சின்னத்துறை கே.ஆர்.புரம் பகுதியில் வைத்து பாஜக வை சேர்ந்த ததேயுஸ், இரவிபுத்தன்துரை சேர்ந்த கெளதம் ராஜ் உள்பட 3பேர் 2 பைக்குகளில் வந்து காங்கிரஸ் பிரமுகர் ததேயுஸை கத்தியால் குத்தி உள்ளனர்.இதில் படுகாயமடைந்த ததேயுஸ் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் பிரமுகர் ததேயுசை சந்தித்து நலம் விசாரித்து உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News