திமுக ஒன்றிய செயலாளர் கார் மீது தாக்குதல்
சேலம் மாவட்டம் ,மேட்டூர் அருகே மேச்சேரியில் திமுக ஒன்றிய செயலாளர் கார் மீது கல்வீச்சு தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2024-04-20 05:06 GMT
மேட்டூரில் திமுக ஒன்றிய செயலாளர் கார் மீது பாமக, வினர் கல்வீசி தாக்குதல். மேட்டூர் அருகே மேச்சேரி புக்கம் பட்டியில் துவக்க பள்ளியில் ப ம க, வினர் கள்ள ஓட்டு போடுவதாக மேச்சேரி திமுக ஒன்றிய செயலாளர் சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. சீனிவாச பெருமாள் தலைமையில் அங்கு சென்ற திமுக நிர்வாகிகள் பாமக,வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய செயலாளர் கார் மீது பாமக,வினர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து திமுக,வினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.