குருந்தன்கோடு அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரின் கணவர் மீது தாக்குதல்

குருந்தன்கோடு அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரின் கணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-27 09:23 GMT

காவல் நிலையம்

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள செக்கார விளை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் அருள்ராஜ் (72). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவரது மனைவி வசந்தா திமுக பிரமுகர். இவர் கக்கோட்டுத்தலை முன்னாள்  ஊராட்சி தலைவர் ஆவார்.      

இந்நிலையில் ஜோசப் அருள்ராஜ் குளச்சல் ஏ எஸ் பி-யிடம் புகர் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-  எனக்கு சொந்தமாக கக்கோட்டுதலை கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க எங்கள் ஊரை சேர்ந்த மரியஜான் ஜோசப் பீட்டர் (73) அவரது மகன்கள் அருள் ஜான், ஜான் கிராஸ் ஆகியோர் முயன்று வருவதுடன் எனது நிலத்தில் உள்ள மரங்களை அழித்து வருகிறார்கள்.      

 சம்பவத்தன்று எனது நிலத்திற்கு சென்றேன். அப்போது மரியஜான் ஜோசப் பீட்டர் எனது  நிலத்தில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவை தம்பால்தாக்கி உடைத்தார். இதனை தட்டிக்கேட்ட என்னை மரிய ஜான் ஜோசப் பீட்டர் மற்றும் அவரது மகன்கள் தாக்கினார்கள். இதில் ஜான் கிராஸ் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.      

இதில் காயம் அடைந்த நான் மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பி உள்ளேன். இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News