பல்லடம் செய்தியாளர் மீது தாக்குதல்: நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீதான கொலை வெறி தாக்குதலை கண்டித்து நாகை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீதான கொலை வெறி தாக்குதலை கண்டித்து நாகை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீதான கொலை வெறி தாக்குதலை கண்டித்து, செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், செய்தியாளரை கொடூரமாக தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும்,
முன்கூட்டியே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டிக்கவும், கடமை தவறிய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் செய்தியாளர் நேசபிரபுவுக்கு உயர் சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
பாதிக்கப்பட்ட செய்தியாளருக்கு அரசு உடனடியாக நிதி உதவி செய்ய வலியுறுத்தி நாகை புதிய பேருந்து நிலையத்தில் நாகை மாவட்ட பத்திரிகையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்திரிகையாளர் மட்டுமல்லாமல் தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் நாடார்,
காவிரி கடைமடை விவசாயிகள் சங்கம் தலைவர் தமிழ்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுதீன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அமிர்தராஜ், தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பங்கேற்பு கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன உரையாற்றினர்.